Ad unit

Breaking News
recent

நல்ல சமுதாய சிந்தனையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அறிந்துகொள்ளும் விதமாக உள்ளது ''நம் கையில்'' குறும்படம் - இயக்குனர் பாக்யராஜ்.

 ''நம் கையில்'' குறும்படத்தை இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் வெளியிட அவரது மனைவியும், பிரபல நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

''டச்வுட் புரொடக்ஷன்'' சார்பில் சாய் ரேவதி தயாரிப்பில் உருவாகியுள்ள குறும்படம் ''நம் கையில்'' இக்குறும்படத்தை எஸ்.மீனாட்சி.எஸ் இயக்கியுள்ளார்.

அப்போது பேசிய கே.பாக்யராஜ், இரு சிறுவர்களை வைத்துக்கொண்டு சமுதாயத்திற்கு தேவயான நல்ல செய்திகளை கூறியுள்ளதாகவும், இது ஒரு குறும்படமாக இருந்தாலும் ஒரு நல்ல சமுதாய சிந்தனையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அறிந்துகொள்ளும் விதமாக உள்ளது என்றார்.

இது போன்ற பல குறும்படங்களையும் , திரைப்படங்களையும் இக்குறும்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் தரவேண்டும் என்று மேலும் அவர் கேட்டுக்கொண்டார்.

 'நம் கையில்' குறும்படத்தின் ஒளிப்பதிவை சாய் நந்தனும், இசையை எம்.எஸ்.ஸ்ரீகாந்தும் கவனித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக 'நம் கையில்' குறும்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் பாக்யராஜ்.

entertamil

entertamil

No comments:

Post a Comment

Powered by Blogger.