Ad unit

Breaking News
recent
தாக்க தாக்க Review

தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்த விக்ராந்திற்கு,விஷால் தனது பாண்டிய நாடு படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். பாண்டியநாடு நன்றாகப் போனதில் விக்ராந்தின் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த படத்தை தூசு தட்டி எடுத்து, தாக்க தாக்க என்று பெயர் மாற்றம் செய்து தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். 

விக்ராந்த் அண்ணன் சஞ்சீவ் இயக்க நட்பிற்காக ஆர்யா, விஷால் மற்றும் விஷ்ணு ஆகியோர் ஒரு பாடலுக்கு நடனமாட, சற்றே தெம்புடன் வெளிவந்திருக்கிறது தாக்க தாக்க திரைப்படம்.

தன் பிறப்பு ஒரு போர்க்களமாக இருந்தால், தன் வாழ்வும் கடைசி வரை ஒரு போர்க்களமாக தான் இருக்கும் என்பதே இப்படத்தின் ஒன் லைன். பாலியல் தொழிலாளிக்கு மகனாக பிறக்கும் விக்ராந்த், தன் தந்தையின் கஷ்டத்தை சிறு வயதில் பார்த்து வளர்கிறார்.
பின் அந்த தொழில் செய்யும் அருள் தாஸ் ஒரு தகராறில் விக்ராந்த் கண்முன்னே தன் அம்மாவை கொலை செய்ய, அங்கிருந்து சென்னைக்கு ஓடி வருகிறார் விக்ராந்த். அங்கு தளபதி ஸ்டைலில் அரவிந்த்சிங் பாசமிகு நண்பனாகிறார் இவருக்கு.
அரவிந்த் சிங், அபிநயாவை விரும்புகிறார். அதேபோல் விக்ராந்த் அபிநயா தோழியாக வரும் லீமாவை விரும்ப சந்தோஷமாக செல்லும் இவர்கள் வாழ்க்கையில், அதே ஏரியாவின் கவுன்சிலர் மூலம் பிரச்சனை வெடிக்கின்றது. 
இந்த பிரச்சனையில் இருந்து இவர்கள் மீண்டார்களா? இல்லை யார் யாரை இழந்தார்களா? என்பதை மிகவும் கனத்த காட்சிகளால் கூறியிருக்கிறார் இயக்குனர் சஞ்சீவ். 
லீமாவிற்கு வெறுமெனெ வந்து போகும் கதாபாத்திரம் தான், ஆனால், அபிநயா தான் படத்தின் ரியல் ஹீரோயின். ஒரு பக்கம் கருப்பு உலகம், மறு பக்கம் நட்பு என இயக்குனர் இரண்டையும் ஒரே திரைக்கதையில் கொண்ட வர முயற்சி செய்து கொஞ்சம் தடுமாறியுள்ளார்.
ஜேக்ஸின் பின்னணி இசை நன்றாக உள்ளது, பாடல்கள் ஏதும் நினைவில் நிற்கவில்லை, ஒளிப்பதிவு சுஜித் படத்திற்கு என்ன கலர் தேவையோ அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார்.
விக்ராந்தின் கதாபாத்திரம், கடைசி வரை முரடனாக செம்ம ஸ்கோர் செய்கிறார். இரண்டாம் பாதியில் அதுவும் கடைசி அரை மணி நேரம் யாருக்கு என்ன ஆகும் என சுவாரசியமாக செல்கின்றது.

மொத்தத்தில் தாக்க தாக்க  பார்க்க பிடிக்கும் ரகம் .

entertamil

entertamil

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.